கோவை: குடும்ப ஓய்வூதியமாக ரூ.9,000 வழங்கிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: குடும்ப ஓய்வூதியமாக ரூ.9,000 வழங்கிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடும்ப ஓய்வூதியமாக ரூ.9,000 வழங்கிட வேண்டும், பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக்கி அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்க தலைவர் இன்னாசிமுத்து, "வரும் 6-ம் தேதி சத்துணவு மானிய கோரிக்கையின் போது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும். தவறினால் ஜூலை 7-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இதில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். கோவை மாவட்டத்தில் இருந்து 2000 பேர் பங்கேற்போம்." என்றார்.
Video: Laxman