வேளாண் பல்கலையில் ஜூன் 6-ல் தேனி வளர்ப்பு பயிற்சி முகாம்

கோவை: கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் 6-ம் தேதி தேனி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.


கோவை: கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் 6-ம் தேதி தேனி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்தப் பயிற்சி முகாமில் தேனீ இனங்களைக் கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை, தேனைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட தேனி வளர்ப்பு முறைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

அதன்படி, நடப்பு மாதத்திற்கான தேனி வளர்ப்பு பயிற்சி முகாம் வரும் 6-ம் தேதி அப்பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ரூ.250 என்ற பயிற்சி கட்டணத்தில் நடத்தப்படும் இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பூச்சியியல் துறையைத் தொடர்பு கொள்ளலாம். 0422-6611214 என்ற தொலை பேசி எண் மூலமாகத் தகவல்களை பெறலாம்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...