கோவை: கோவையில் சேதமடைந்து விழும் நிலையில் இருந்த மின் பெட்டிகளை நிலை நிறுத்த தற்காலிகமாக கற்களை வைத்து அடுக்கியுள்ளது மின்வாரியம்.
கோவை: கோவையில் சேதமடைந்து விழும் நிலையில் இருந்த மின் பெட்டிகளை நிலை நிறுத்த தற்காலிகமாக கற்களை வைத்து அடுக்கியுள்ளது மின்வாரியம்.

வடகோவை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மின்சார பெட்டிகள் சேதமடைந்து விழும் நிலையில் இருந்தது. அபாயகர நிலையில் இருந்த அந்த இடம் குறித்து சிம்ப்ளி-சிட்டி கடந்த மாதம் 9-ம் தேதி புகைப்படச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த மின் பெட்டிகள் மேலும் சாய்ந்துவிடாமல் இருக்க, அதற்கு கீழ் பகுதியில் கற்களை வைத்து அடுக்கி அதனை தற்காலிகமாக நிலைநிறுத்தியுள்ளனர்.