'நான் புகாரே கொடுக்கவில்லை': துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீசார் மீது புகார்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போடப்பட்ட தென்பாகம் போலீசாரின் எப்.ஐ.ஆர்.,ல் தவறான பெயர் குறிப்பிட்டிருப்பதாக அதிகாரி அளித்த புகாரினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போடப்பட்ட தென்பாகம் போலீசாரின் எப்.ஐ.ஆர்.,ல் தவறான பெயர் குறிப்பிட்டிருப்பதாக அதிகாரி அளித்த புகாரினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக வடபாகம், சிப்காட், தென்பாகம் போலீசார் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் தென்பாகம் போலீசார், திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் புகார் கொடுத்ததாக வழக்கினை பதிவு செய்துள்ளனர்.

ஆனால் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலராக கண்ணன் என்பவர் பணியாற்றுவதாகவும், கோபால் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலகராக பணியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய பெயரை போலீசார் தவறுதலாக பயன்படுத்திவிட்டதாக கூறி கோபால், உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.

அதில், "துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றபோது, தூத்துக்குடி சப்-கலெக்டர் உத்தரவின் பேரில் நிர்வாக நடுவராக 3-வது மைல் பகுதியில் தான் பணியிலிருந்ததால், இது தொடர்பாக நான் எந்த புகாரும் அளிக்கவில்லை. நான் பணிபுரிந்த திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பதவியை குறிப்பிட்டு தென்பாகம் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நானும், எனது குடும்பத்தாரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால் இதுகுறித்து உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

கோபால் எழுதிய இந்த கடிதம் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலர் கோபாலுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று ஒரு மனு அளித்தனர்.

அதில், தூத்துக்குடியில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், கோபால் தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், தான் ஏதும் புகார் அளிக்கவில்லை எனவும் அவர் மறுத்துள்ளதால், இதுகுறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக அச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்பாகம் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் பொய்யான பெயரைக் குறிப்பிட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...