கோவை: போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குட்டி யானை உயிரிழந்தது.
கோவை: போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குட்டி யானை உயிரிழந்தது.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வால்கரடு சரகப்பகுதில் சுற்றுப்பணியாளர்கள் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் இன்று அதிகாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த யானை தடுப்பு ஆகழியை ஒட்டி சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் குட்டி யானை இறந்ததுள்ளது தெரியவந்தது.
அந்த யானையின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியாத போதிலும், அதற்கு வாய் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும், அதுவே மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.