கோவை: ரஜினிகாந்த் காவிரி பிரச்சனை தொடர்பாக குரல் கொடுத்ததால் காலா படதிற்கு கர்நாடகாவில் தடை என்றால், அதனை விட முடியாது என்றும் கர்நாடக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
காவிரி நீர் சரியாக வரக்கூடிய வாய்ப்பை பெற்று தந்தவர் அவர் தான்.
கோவையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
காலா திரைப்படம் கர்நாடகாவில் திரையிட தடை செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது.
திரைப்படத்தை ஏற்பது குறித்து பொதுமக்கள் முடிவு செய்வார்கள்.
ரஜினிகாந்த் காவிரி பிரச்சனை தொடர்பாக குரல் கொடுத்ததால் இந்த தடை என்றால் அதனை விட முடியாது.
காலா திரைப்படம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையம் உரிய முறையில் விசாரணை நடத்தும். 99 நாட்கள் அமைதியாக நடைபெற்ற போராட்டம்,100-வது நாளில் வன்முறையாக மாறியுள்ளதையே நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர்களை இழிவு படுத்திய நடிகர் எஸ்.வி.சேகர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு அவர் பேசினார்.