உதகை - கேத்தி இடையே இன்று முதல் வார இறுதிச் சுற்றுலா ரயில் இயக்கம்: முதல்நாளில் ரூ. 24,000 வசூல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கிராம சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் உதகை - கேத்தி இடையே இன்று முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கிராம சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் உதகை - கேத்தி இடையே இன்று முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வரும் 16-ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயங்குகிறது. இந்நிலையில், சமீபத்தில் நீலகிரி மலை ரயிலை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்சிரேஷ்தா மற்றும் சேலம் கோட்ட மேலாளர் சுப்புராவ் ஆகியோர், ''நீலகிரியில் மீண்டும் நிலக்கரி நீராவி இன்ஜின் மூலம் ரயில்களை இயக்க முடிவு செய்யப்படும்,'' என, அறிவித்தனர்.



மேலும், உதகை - கேத்தி இடையே வார இறுதி நாட்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், வட்ட சுற்றுலா ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, இன்று முதல் இந்த ரயில் இயக்கப்பட்டது. இதில், 16 இருக்கைகள் கொண்ட ஒரு முதல் வகுப்பு, 36 இருக்கைகள் மற்றும் 30 இருக்கைகள் கொண்ட இரு இரண்டாம் வகுப்பு என 82 இருக்கைகளுடன் மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.



உதகையில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு கேத்தியை 3:00 மணிக்கு ரயில் சென்றடையும். மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு உதகைக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், முதல் வகுப்பிற்கு ரூ. 400-ம், இரண்டாம் வகுப்பிற்கு ரூ. 200-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இந்தக் கட்டணத்தில் பயணி ஒருவருக்கு, 'சமோசா, வெஜிடேபிள் சூப், ரயில்வே சின்னம் பொறித்த தொப்பி, நீலகிரி மலை ரயில் குறித்த கையேடு, பேப்பர் பை' ஆகியவை வழங்கப்பட்டது. கிராம சுற்றுலாவை மேம்படுத்த இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



இந்த அறிவிப்புக்கு, நீலகிரி மலை ரத அறக்கட்டளை நிர்வாகிகள் நடராஜ் மற்றும் உள்ளூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சீசன் காலங்களில் இந்த அறிவிப்பு வெளிவந்திருந்தால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, முதல்நாளில் இந்த ரயிலில், 95.35 சதவீத பயணிகள் பயணம் செய்தனர். அதாவது, 86 இருக்கைகளில், 82 இருக்கைகள் நிரம்பின. இதன்மூலம், ரூ. 24,600 வசூலிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...