கோவை: கோவையில் ரூ. 1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் கள்ள நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் ரூ. 1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய்கள்ள நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சாய்பாபாகாலனி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை அவர்கள் சோதனை செய்தனர்.
அந்த வாகனத்தில் வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், காரமடையை சேர்ந்த சுந்தர் மற்றும் ஒருவர் இருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது ரூ.83,96,000 மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், அச்சடிக்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 20,00,000 மதிப்பிலான கள்ள நோட்டுக்களும் இருந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கைதாகியுள்ள ஆனந்தன் மீது ஏற்கனவே வாகன திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Video: Laxman