இது என்ன சினிமா போலீசா..? ரஜினியை கிண்டல் செய்த டி.டி.வி., தினகரன்

போலீஸ்காரர்கள் அனைவரும் உத்தமர்களாக இருக்க, இது என்ன சினிமாவா..? என தூத்துக்குடி விவகாரத்தில் போலீசாருக்கு ஆதரவாக பேசிய ரஜினியை, எம்.எல்.ஏ., டி.டி.வி., தினகரன் கிண்டலடித்துள்ளார்.

போலீஸ்காரர்கள் அனைவரும் உத்தமர்களாக இருக்க, இது என்ன சினிமாவா..? என தூத்துக்குடி விவகாரத்தில் போலீசாருக்கு ஆதரவாக பேசிய ரஜினியை, எம்.எல்.ஏ., டி.டி.வி., தினகரன் கிண்டலடித்துள்ளார். 

சென்னையில் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ., டி.டி.வி., தினகரன் கூறியதாவது:- ரஜினிகாந்த் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அவர் பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குரலாக ஒலிக்கிறார். தமிழக காவல்துறை எப்படிப்பட்ட அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது என்பது மக்களுக்கு தெரியும். குட்கா ஊழலுக்கு அவர்கள்தான் காரணம். அது ரஜினிக்கு தெரியாதா..? ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, குடிசைகளுக்கு, வாகனங்களுக்கு தீ வைத்தது போலீசார் என்பதை மறந்து விட்டு பேசுகிறார். இந்தக் குற்றச்சாட்டிற்கு போலீசார் தரப்பில் இருந்தே இன்னும் மறுப்பு வரவில்லை.

ஆனால், போலீசுக்கு ஆதரவாக ரஜினி பேசுகிறார். சினிமாவில் ஒரு நிலைப்பாடும், வெளியே ஒரு நிலைப்பாடும் அவர் எடுத்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் வாயில் வந்ததெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார். அவருடைய தொகுதிக்கே போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் அவரால் செல்ல முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி விட்டோம் என்று முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், சட்டப்பேரவையில் முறையாக தீர்மானம் நிறைவேற்றி அவசரச் சட்டம் பிறப்பிக்காவிட்டால், நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் ஆலையை திறக்க வாய்ப்பு உள்ளது.

முதலமைச்சர் என்ன செய்தோம் என்று சட்டப்பேரவையில் சொல்கிறாரே தவிர, என்ன செய்யப்போகிறோம் என்பதை அவர் சொல்லவில்லை. இன்னும் 2, 3 மாதங்களில் பாருங்கள், ஸ்டெர்லைட் பற்றிய உண்மை நிலவரம் தெரிய வரும், இவ்வாறு அவர் கூறினார்

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...