கோவை: இந்தியாவில் நடைபெற்ற 48 ஆண்டு குடும்ப ஆட்சியில் செய்யாததை 48 மாதத்தில் பிரதமர் மோடியின் அரசு செய்துள்ளதாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ராஜவர்தன ரத்தோர் தெரிவித்துள்ளார்.
கோவை: இந்தியாவில் நடைபெற்ற 48 ஆண்டு குடும்ப ஆட்சியில் செய்யாததை 48 மாதத்தில் பிரதமர் மோடியின் அரசு செய்துள்ளதாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ராஜவர்தன ரத்தோர் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ராஜவர்தன் ரத்தோர், கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் 4 ஆண்டு பா.ஜ.க., அரசின் சாதனையை விளக்கினர். அப்போது, அவர் பேசியதாவது:-

உலகிலேயே மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டு திட்டமாக ஆயூஷ்மான் பாரய் முதன்முறையாக நாட்டில் அமல்படுத்தப்படுகிறது. இது, 50 கோடி கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தில் இதுவரை 31 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி உள்ளது. அதன்மூலம், 39 கோடி மானியமாக மக்களுக்கு வங்கி கணக்கு மூலம் நேரடியாகப் பயனாளிகளை சென்று சேருகிறது.
கடந்த 2004 முதல் 2014 ஒரு நவீன மாற்றமும் பாதுகாப்புத்துறையில் கொண்டு வரப்படவில்லை. பல்வேறு நவீன மாற்றங்களும் ஒன் ரேங்க் ஒன் பென்சன் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவததில் பன்முக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 33% விவசாய விலை பொருள் சேதமடைந்தாலே இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், முந்தைய ஆட்சியில் 50 சதவிகிதம் சேதமடைந்தால் தான் இழப்பீடு வழங்கப்படும்.
இதேபோல, பெண்கள் மேம்பாடு, திறன் மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் பள்ளியில் பயிலும் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 5 லட்சம் விதம் 8 வருடங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.
தற்போது, ஏசி ரயில்களை விட விமானங்களில் அதிக மக்கள் பயணம் செய்துள்ளனர். 2017-ல் மட்டும் உள்நாட்டு விமானத்தில் 100 மில்லியனை கடந்து பயணித்துள்ளனர். இந்தியாவில் 1947-ல் இருந்து 2014 வரை 6.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்ட நிலையில், 2014 முதல் இதுவரை 7.25 கோடி கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஓட்டு அரசியலுக்காக அல்ல, நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும் செய்துள்ளோம்.
இடைத்தேர்தலில் சில இடங்களில் தோல்வியை தழுவி இருக்கலாம். ஆனால், மக்கள் தங்கள் எதிர்காலத்தை எண்ணி எங்கள் கட்சிக்கே ஓட்டு போடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். மேலும், செய்தியாளர்கள் எங்கள் ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டலாம். அப்போது, தான் அதனை சரி செய்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும்.
தனியார் நிறுவனங்களைப் போல, ஒவ்வொரு துறைக்கும் இலக்கு நிர்ணயம் செய்து ஆட்சி செய்து வருகிறோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தமிழக அரசின் நடவடிக்கையும், காவல்துறை நடவடிக்கையும் மத்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளது.
அடுத்த 4 ஆண்டுகளில் 150 மாவட்டத்தில் பிரத்யேக விளையாட்டு பள்ளி அமைக்கப்படும். பெட்ரோல், டீசலின் மூலம் கிடைக்கும் வரியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.