கோவையில் நீரா பானத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்ய அனுமதி

கோவை: நீரா பானம் மற்றும் அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை கோவை தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


கோவை: நீரா பானம் மற்றும் அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை கோவை தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தென்னை சாகுபடியில் தேசிய அளவில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில், லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தென்னை வாழ்வாதாரமாக உள்ளது. தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும், அவர்களது வருமானத்தை உயர்த்தவும் 'நீரா' பானத்தை இறக்கவும், அதனைப் பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய 'தமிழ்நாடு நீரா விதிகள் 2017'-யை வடிவமைத்து, அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்த தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே நீரா பானத்தையும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுவர். கோவையில் உள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இதன் உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிமத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

இதன்மூலம், நீரா பானத்தில் இருந்து, நீரா வெல்லம், நீரா பாகு, நீரா சர்க்கரை, நீரா சாக்லேட்டுகள், நீரா கூழ், நீரா கேக் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்கவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...