மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழக நாட்டுப்புற நடனங்களை ரஷ்ய நாட்டு நடனக் கலைக்குழுவினர் நடனமாடிக் காட்டியது அனைவரையும் மெய்மறக்கச் செய்தது.

இந்திய - ரஷ்யா கலாச்சார பரிவர்த்தனை அடிப்படையில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நடன கலைக்குழுவினர் நமது நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ரஷ்ய நாட்டின் கிராமப்புற நடனக் கலைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தவும், இங்குள்ள பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை அறிந்து கொள்ளவும் இருபது பேர் கொண்ட நடனக் குழுவினர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வந்திருந்தனர்.
அவர்கள், இந்தியா - ரஷ்ய கலாச்சார நடனங்களை வெகு நேர்த்தியாக ஆடிக்காட்டி அசத்தினர். குறிப்பாக, தமிழகத்தின் நாட்டுப்புற நடனங்களை ரஷ்ய பெண் கலைஞர்கள், அவர்களது நடன பாணியில் ஆடியதும், இளையராஜாவின் இசையில் உருவான தமிழ் பாடல்களுக்கு ரஷ்ய நாட்டின் பாரம்பரிய நடனக்கலையான பாலே நடன பாணியில் ஆடியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான பிரபல ஜெய் கோ பாடலுக்கும் நடனம் ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

நுனிக்காலை மட்டும் தரையில் ஊன்றி மின்னல் வேகத்தில் சுழன்றாடி, தங்களது நாட்டின் பழம்பெரும் நடனக் கலைகளின் பெருமையை இந்த ரஷ்ய நடனக்குழுவினர் வெளிக்காட்டினர்.
"தமிழகத்தின் நாட்டுப்புறக் கலை நடனங்கள் ரஷ்யாவில் மிகவும் பிரபலம். இந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரத நாட்டியத்தை ரஷ்ய மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதுபோன்ற கலாச்சாரக் கலை பரிவர்த்தனை மூலம் இந்தியா - ரஷ்ய உறவு மேலும் பலப்படும். இரு நாட்டு மக்களிடமும் ஒரு நெருங்கிய புரிந்துணர்வை ஏற்படுத்தும்," என்கின்றனர் ரஷ்ய நாட்டு நடனக்குழு ஒருங்கிணைப்பாளர்கள்.
மேட்டுப்பாளையத்தில் 2 நாட்கள் தங்கவுள்ள இந்த ரஷ்ய நடன குழுவினர், இங்குள்ள கிராமப்புற இசை மற்றும் நடனங்கள் குறித்தும் ஆர்வமுடன் கேட்டறிந்து வருகின்றனர்.