நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினக்குடி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழையுந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினக்குடி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழையுந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சிங்காரா வன ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிங்காரா சரகத்துக்கு உட்பட்ட கல்லல்ஹா பாலம் பகுதியில் தனியார் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டனர். அந்த வாகனம் அத்துமீறி வனப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததால், வன ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வாகனத்தில் இருந்தவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால், வன ஊழியர்கள் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஈரோட்டைச் சேர்ந்த கோகுல் பிரசாத் (25), கவின் (26) மற்றும் உதகை நஞ்சநாட்டைச் சேர்ந்த மோகன் (35) என்பது தெரிய வந்தது. பின்னர், சரகர் மாரியப்பனின் உத்தரவின் பேரில், மூவரிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு, அவர்களது வாகனம் விடுவிக்கப்பட்டது.