குஜராத்தில் மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் சிலை சென்னை கொண்டுவரப்பட்டது

சென்னை: தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டு சென்னை கொண்டுவரப்பட்டது.


சென்னை: தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டு சென்னை கொண்டுவரப்பட்டது. 

தஞ்சை பெரிய கோவில் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜராஜ சோழன் சிலை (உயரம் 75 செ.மீ.) மற்றும் அவரது பட்டத்து இளவரசி ராணி லோகமாதேவி சிலை (உயரம் 55 செ.மீ.) ஆகிய 2 சிலைகளும் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. சுவாமிநாதன் புகார் தெரிவித்தார்.

மேலும், இந்த 2 சிலைகளின் மதிப்பும் ரூ. 100 கோடிக்கு மேல் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அவ்வப்போது ரகசியமாக பெரியகோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி சென்றனர்.

அப்போது சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், குஜராத்தில் உள்ள தாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜ சோழன் சிலை மற்றும், லோகமாதேவி சிலைகளை மீட்பதற்கு சரியான தகவல்களையும், ஆதாரங்களையும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக சேகரித்தனர்.

இதைத் தொடர்ந்து, சிலை தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் குறித்து சரியான தகவல்களை எடுத்துக் கொண்டு குஜராத் சென்று சிலைகள் உள்ள அருங்காட்சியகத்தில் அதை ஒப்படைத்தனர். அங்கு இருந்த 2 சிலைகளும் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிலைகள் தான் என்பது தெரிந்ததும், அருங்காட்சியக நிர்வாகம் ராஜராஜ சோழன் சிலையையும், லோகமாதேவி சிலையையும் சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சிலைகள் அங்கிருந்து ரெயில் மூலம் இன்று சென்னை கொண்டுவரப்பட்டது. அமைச்சர் பாண்டியராஜன் சிலைகளை வரவேற்றார். விரைவில் சிலைகள் தஞ்சைக்கு எடுத்துச் சென்று பெரிய கோவிலில் வைக்கப்பட உள்ளது. 

Newsletter

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...