தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஜுலை 6-ம் தேதி உலகத் தமிழ் இணைய மாநாடு

கோவை: மூன்று நாட்கள் நடக்கும் 17-வது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் ஜுலை 6-ம் தேதி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

கோவை: மூன்று நாட்கள் நடக்கும் 17-வது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் ஜுலை 6-ம் தேதி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

உத்தமம் என சொல்லக்கூடிய உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் 1997-ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 17-வது உலகத் தமிழ் இணைய மாநாடு ஜூலை மாதம் 6,7 மற்றும் 8 தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.



இது குறித்து உத்தமம் துணைத் தலைவர் மணியம் கூறுகையில், "அறிவுசார் தமிழ் தேடுபொறிகள்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாடு ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம் என மூன்று பிரிவுகளில் நடைபெற உள்ளது. ஆய்வரங்கத்தில் இயல்மொழிப் பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள், இணையப் பாதுகாப்பு, தொழில்நுட்ப யுகத்தில் தமிழ் வகுப்பறைகள் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் வழங்கவுள்ளனர்.

மக்கள் அரங்கத்தில் பொதுமக்களுக்கும், மாணவருக்கும் அலைபேசிகளுக்கான IoT, Python, Robotics Technology, 3D printing குறுஞ்செயலி உருவாக்கப் பயிற்சி, கணினி சார்ந்த பயிற்சிகள், இணையம் சார் பயிற்சிகள் ஆகியவை கொடுக்கப்படவுள்ளன. கண்காட்சி அரங்கில் மழலையர் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை எல்லோரும் பயன்பெறும் வகையில் பலகைக் கணினி முதல் அனைத்துக் கருவிகளும் தமிழ் கருப்பொருளுடன் இம்மாநாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். உலகளவில் இருந்து 9 முக்கிய பேச்சாளர்கள் வரவுள்ளனர். கூகுள் நிறுவனத்திலிருந்து பேச்சாளர் வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது," என்றார்.

சுவிட்சர்லாந்து, ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, போன்ற நாடுகளில் இருந்து 160-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பேராசியர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி கூறுகையில், "தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தான் முதன் முதலில் தமிழ் அறிவியல் மாநாடு நடைபெற்றது. அதன் பின் தொடர்ச்சியாக மூன்றாடுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, உலக தமிழ் இணையம் மாநாடு இங்கு நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. மாநாடுக்கு தேவையான அனைத்தும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துத் தரப்படும்," எனக் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...