திருப்பூர்: சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் போதை விநோத விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் நாடகம் அரங்கேற்றப்பட்டது.
திருப்பூர்: சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் போதை விநோத விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் நாடகம் அரங்கேற்றப்பட்டது.

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பிரஜாபிதா அமைப்பின் சார்பில் சிகரெட், மதுபாட்டில், போதை ஊசி போன்றவற்றின் மாதிரிகளை வேடமாக அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், இதுபோன்ற புகைப் பழக்கங்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடகம் மூலம் விளக்கிக் கூறினர். இதைத்தொடர்ந்து, புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.