ஸ்டாலின் தான் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கினார் - முதலமைச்சர்

சென்னை: கடந்த 2010-ல், தொழில்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் தான் தான், ரூ.1,500 கோடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு 230 ஏக்கர் நிலம் வழங்கினார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.


சென்னை: கடந்த 2010-ல், தொழில்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் தான் தான், ரூ.1,500 கோடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு 230 ஏக்கர் நிலம் வழங்கினார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்ததைத் தான் நாங்கள் சொன்னோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தே அரசாணை வெளியிடப்பட்டது. தனிப்பட்ட ஒரு ஆலையை பற்றி தீர்மானம் நிறைவேற்ற முடியாது.

கடந்த 2010-ல், தொழில்துறை அமைச்சராக ஸ்டாலின் தான் இருந்தபோது தான், ரூ.1500 கோடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு 230 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. மாதிரி சட்டசபையில் எது வேண்டுமானாலும் பேசி விடலாம் ஆனால். சட்டசபையில் உண்மையே பேச வேண்டும். சட்டசபையில் பேசினால் உண்மை வெளிவந்து விடும் என்ற அச்சம் காரணமாக தி.மு.க., சட்டசபைக்கு வரவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் என்றாலும் ஜெயலலிதா போல் இருக்க வேண்டும். 2006-ல் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றிய போது தன்னந்தனியாக ஜனநாயக கடமையாற்றியவர் ஜெயலலிதா. 67 துறை அமைச்சர்களின் குறுக்கீடுகளை எதிர்கொண்டு பேசியவர் ஜெயலலிதா. என்று அவர் பேசினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...