கோவை: புகையிலை என்பதே ஒரு அபாயமான வார்த்தை என்று கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

உலக புகையிலை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோயியல் துறை சார்பாக புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "புகையிலை என்பதே ஒரு அபாயமான வார்த்தை. மூன்றாம் தர போதைப் பொருட்களால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

அந்த பழக்கத்திற்கு அடிமையாவதில் இருந்து மீள்வது நமது கைகளில் தான் உள்ளது. புகையிலையை உபயோகிக்காதீர்கள். அது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும்."என்றார்.
தொடர்ந்து, அம்மருத்துவமனை மருத்துவர் குகன் பேசுகையில், "இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் மருத்துவமனை நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டில், டிஜிட்டல் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டுள்ளோம். அதிலுள்ள கியூ-ஆர் கோடினை (QR code) ஸ்கேன் செய்து உலக புகையிலை தினத்தின் விழிப்புணர்வு செய்தியினை கேட்க முடியும்." என்றார்.