தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். அரசு மருத்துவர், ஒரு தடயவியல் நிபுணர் அல்லது எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவர் பரிசோதனை நடத்த வேண்டும். குண்டு பாய்ந்த, வெளியேறிய பகுதிகளை போட்டோ எடுக்க வேண்டும். உடலை முழுமையாக அனைத்து கோணங்களிலும் எக்ஸ்ரே எடுக்க வேண்டும். பிரேத பரிசோதனை முடிந்த உடல்களை உறவினர்கள் கேட்டால்மட்டும் கொடுக்கலாம், என உத்தரவில் கூறியுள்ளது.
இதனிடையே, தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை நடத்த கூடாது. அவ்வாறு நடத்தப்பட்டால் தடயங்கள் அழிக்கப்படும் என சங்கரசுப்பு என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். சங்கர சுப்புவின் எதிர்ப்பை அடுத்து ஒரு வாரம் காலத்திற்கு ஆறு பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்த தடை விதித்து தனது புதிய உத்தரவில் தெரிவித்துள்ளது.