தூத்துக்குடியில் வன்முறையால் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், இளைஞர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திகைத்த சம்பவம் வீடியோவாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், அரசியலில் களம் காண இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது, சிகிச்சை பெற்று வருபவர்களில் ஓர் இளைஞர் ரஜினியைப் பார்த்து, "யார் நீங்க..?" என்று அந்த வீடியோவில் கேட்கிறார். அதற்கு ரஜினியோ ``நான் ரஜினிகாந்த்" என்று சொல்கிறார். ``ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், ``நான் சென்னையிலிருந்து வருகிறேன்" என்று சொன்னதும், ``சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா..?" என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார்.
அந்த இளைஞர் குறித்து விசாரித்ததில், அவருடைய பெயர் சந்தோஷ் என்பதும், `அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்' என்பதும் தெரியவந்தது.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வருகையின் போது, கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர், தமிழுக்காக போராட்டம் நடத்தினால் மட்டும் பத்தாது, தமிழர்களை வாழவிட வேண்டும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.