நீலகிரி: ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி உதகையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அஞ்சல் ஊழியர்கள் இன்று திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிராமப் புற அஞ்சல் ஊழியர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடெங்கும் பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றது. இன்று உதகையில் உள்ள தலைமை தபால் நிலையம் 9-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் 7-வது ஊதிய குழு கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமுல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உதகை தலைமை தபால் நிலையம் முன்பு திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.