கர்நாடகாவில் காலா படத்தை திரையிடத் தடை

கர்நாடகாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

கர்நாடகாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் உலகம் முழுவதும் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது.

இந்த நிலையில், காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் வாட்டாள் நாகராஜ் தற்போது விடுத்து இருந்த அறிக்கை ஒன்றில் "சத்யராஜ் போல ரஜினி மன்னிப்பு கேட்டாலும் காலா படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம்" எனக் கூறி இருந்தார். தற்போது, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூட்டத்தில் காலா படத்திற்கு தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மாநில நலன் கருதி காலா படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறி உள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...