துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் : வைகோ

கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது. பிரதமர் மோடியின் கைப்பாவையாக அ.தி.மு.க., அரசு செயல்படுகின்றது. சட்டவிரோதமாக சிவில் ஆடையில் இருந்த போலீசார் ஸ்நைப்பர் துப்பாக்கி மூலம் பொதுமக்களை குறிவைத்து சுட்டு கொன்றுள்ளனர். துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த போலீசாரே தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். மேலும், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் தீ வைக்கப்பட்டது என பொய்யான தகவல் பரப்பப்பட்டுள்ளது. 

ஆனால், அங்கு ஒரு சிறு சேதம் கூட கிடையாது.

ஹிட்லர் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்து விட்டு கம்யூனிஸ்டுகள் மேல் பழி போட்டது போல, தமிழக போலீசார் செயல்படுகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும். தமிழக அரசு ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவான அரசாக உள்ளது. 

உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதித்தாலும், தூத்துக்குடியில் அந்த ஆலையை இயங்க நாங்கள் விடமாட்டோம். கட்சி கொடி இல்லாமல் போராடுவோம். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக செயல்படுவதால் ஒவ்வொரு தேர்தலிலும் என்னை தோற்கடிக்க அந்த நிறுவனம் பணம் செலவழித்தது. இதை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் பணம் வாங்கிவிட்டதாகக் கூறி நாம் தமிழர் கட்சியினர் ம.தி.மு.க.,வை பற்றியும், என்னைப் பற்றியும் அவதூறு பேசி வருகின்றனர். ரூ. 52 கோடி பணம் வாங்கி விட்டதாக பிரபல டி.வி.க்களின் பெயரில் நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ் போடுகின்றனர். 

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளுக்கு காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். அதற்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும், எனக் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...