திருப்பூர்: திருப்பூரில் ஸ்டைலாக வெட்டிய முடியை, தந்தை மாற்றி வெட்டி விட்டதால் விரக்தியடைந்த 15 வயது சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் 2-வது வீதியை சேர்ந்த தையல் தொழிலாளி சுரேஷ், விஜயலட்சுமி தம்பதியினரின் இளைய மகன் நவீன்குமார் (15). இவர், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு, விடுமுறையில் வீட்டில் பொழுதைக் கழித்து வந்தார். அடுத்த வாரம் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்க உள்ளதால், நவீன்குமாரை அவருடைய தந்தை அருகில் உள்ள சலூனுக்கு சென்று முடிவெட்டி வருமாறு கூறி அனுப்பி உள்ளார். கடைக்கு சென்ற நவீன்குமார், தனக்கு பிடித்ததைப் போல ஸ்டைலாக முடி வெட்டி விட்டு வீடு திரும்பியுள்ளார்.
இதைக் கண்ட சிறுவனின் தந்தை சுரேஷ், முடி ஸ்டைலாக இருந்ததால் கடுமையாக கோபமடைந்துள்ளார். இதையடுத்து, அவர் உடனடியாக நவீன்குமாரை அதே கடைக்கு அழைத்து சென்று முடியை ஒட்ட வெட்டிவிட்டுள்ளார். இதனால், சிறுவன் மனவிரக்தியடைந்துள்ளான். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த நவீன், தனக்கு விருப்பமானபடி ஹேர்ஸ்டைல் வைக்க முடியவில்லை என்ற வேதனையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் நவீன்குமாரை மீட்டு, குமார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினார்.
இதுகுறித்து தகவலறிந்த வேலம்பாளையம் போலீசார் நவீன்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருடத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் ஸ்டைலாக வெட்டிய முடியை தந்தை மாற்றி வெட்டி விட்டதால், 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.