கோவையில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை : 6 ஆண்டுகளில் 1,30,532 பேருக்கு சிகிச்சை

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஆறு ஆண்டுகளில் வெறி நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஆறு ஆண்டுகளில் வெறி நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை உட்பட நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் அண்டை மாநிலமான கேரளா என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். பல நவீனக் கருவிகளைக் கொண்ட அரசு மருத்துவமனையில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெறி நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இப்படி லட்சக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதைப் பெருமையாக கொள்வதா...? இல்லை, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த தவறிய மாநகராட்சி அதிகாரிகளின் பணியைக் கண்டு கவலை கொள்வதா...? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மனிதர்களைத் துரத்தும் வெறி நாய்கள் :

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தெரு நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் துரத்தித் துரத்தி கடிக்கிறது. இப்படி நாய் துரத்துவதால் பயந்துபோன வாகன ஓட்டிகள் வேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாகியும் வருகின்றனர். குறிப்பாக, நாய்களுக்கு பயந்து செல்லும் முதியோர்களும், குழந்தைகளும்தான் தெருநாய் கடியினால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அதேபோல, அதிகாலையில் நடைபயிற்சி செய்பவர்களையும், நள்ளிரவில் பணி முடிந்து வீடு திரும்புபவர்களையும் தெருநாய்கள் விட்டு வைப்பதே இல்லை.

இது குறித்து போத்தனூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கூறியதாவது :- நான் போத்தனூரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகில் 15 வருடமாக லேத் வொர்க்ஷாப் நடத்தி வருகிறேன். இரவு பணி முடிந்து வீட்டுக்குப் போவதற்கு 12 மணி ஆகிடும். அப்படி நான் இருசக்கர வாகனத்தில் போகும்போது, சாலையில் இருக்கும் நாய் எல்லாம் துரத்தும். பகல் நேரங்களில் பழக்கப்பட்ட நாயாக இருந்தாலும், இரவுநேரம் வாகனத்தில் செல்லும் போது 

ரொம்ப ஆக்ரோஷமாக, வெறித்தனமாக துரத்தும். நான் தைரியமாக வாகனத்தை நிறுத்தி சத்தம் போடுவேன். பிறகு, அந்த நாய்கள் ஓடிவிடும். ஆனால், நாய் துரத்தும் போது, வேகமாக சென்றால் அது இன்னும் நம்மைத் துரத்தும், அப்புறம் கடிக்கும். இரவுப் பணி முடிந்து வரும் போது எல்லாம், இப்படி போராட்டமாக இருக்கும், என்றார்.

தெரு நாய்களின் அதிகரிப்பு : காரணம் என்ன..?

தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள், பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நகரில் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது.

செயலற்று கிடக்கும் மாநகராட்சி :

தெருநாய்களுக்குச் செய்யப்படும் கருத்தடை சிகிச்சைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தம், இன்னும் கையெழுத்திடப்படாமல் மாநகராட்சி நிர்வாகத்தினரால் நிலுவையில் உள்ளது. இதனால், சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்து எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், மாநகராட்சியின் இந்த தாமதத்தால், தெருநாய்கள் மீண்டும் குட்டிப்போடத் தொடங்கி, அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

ஒன்றரை லட்சம் வெறிநாய்கடி சிகிச்சை :

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகளில் மட்டும் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு 40 பேர் வரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில், அரசு மருத்துவமனையில் நாய்க்கடிக்கு கடந்த 6 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 532 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர்வேல் கூறியதாவது :- கோவை அரசு மருத்துவமனையில் வெறிநாய்க்கடியில் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக நாய் கடியினால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சாதாரணமாகவே நாய்கள் மேலோட்டமாக கடித்தாலும் விஷக்கிருமிகள் இருக்கும். அப்படி பாதிக்கப்படும் நபர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். நாய்க்கடியின் பின் விளைவுகள் உடனடியாக தெரியாது. இது நாள்பட்ட நோய்களாக மாறிவிடும். 

பின்னர் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே. நாய் கடித்தால் லேசான காயமாக இருந்தாலும் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதற்கான அனைத்து வசதிகளும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. வெறிநாய் கடித்து வரும் நபர்கள் ஆறு முறையாவது ஊசி போட்டுக் கொண்டால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். செல்லப்பிராணி என்று நினைத்து எச்சரிக்கைகள் இல்லாமல் விலங்குகளிடம் பழகுவது ஆபத்தானது. ஆகவே, வந்தபின் மருத்துவமனையைத் தேடுவதைவிட வரும்முன் காப்பதே சிறந்தது, என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...