தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து, அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து, அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்த நிலையில், தூத்துக்குடியில் தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அரசாணையைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது.