கோவையில் தொழிலதிபர் வீட்டில் 60 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை

கோவை: கோவை அருகே தொழில் அதிபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 60 சவரன் நகை மற்றும் ரூ. ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை: கோவை அருகே தொழில் அதிபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 60 சவரன் நகை மற்றும் ரூ. ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்த கவையகாளியம்மன் வீதியை சேர்ந்தவர் ரூபன். இவர் நேற்று இரவு தனது குடும்பத்துடன் சினிமாவிற்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. ஒரு லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. 

இது குறித்து அவர் கோவில்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கு பதிவான கை ரேகையை கொண்டு, பழைய கொள்ளையர்கள் யாராவது இச்செயலில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...