அ.தி.மு.க., ஐ.டி.விங்க் செயலாளர் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு

பத்திரிக்கையாளர்களை தெருநாய் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட விவகாரத்தால், அ.தி.மு.க., ஐ.டி.விங்க் செயலாளர் ஹரி பிரபாகரன் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பத்திரிக்கையாளர்களை தெருநாய் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட விவகாரத்தால், அ.தி.மு.க., ஐ.டி.விங்க் செயலாளர் ஹரி பிரபாகரன் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

தூத்துக்குடியில் கடந்த 22-ஆம் தேதி ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், நேற்று மாநில செய்தி தொடர்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயம் அடைந்தவர்களை பார்க்கச் சென்றார். அப்போது, அவருக்கு பெண்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில், இன்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காயமடைந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினர். அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்க மற்றும் இவர்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக பத்திரிக்கையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 

இந்த நிலையில், அ.தி.மு.க., ஐடி விங்க் செயலாளர் ஹரி பிரபாகரன் பத்திரிக்கையாளர்களை மிகவும் மோசமாக விமர்சித்து டுவீட் வெளியிட்டு இருந்தார். அதாவது, "துணை முதலமைச்சர் மருத்துவமனையில் பார்வையிட்டு இருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் வாசலில்தான் இருக்க வேண்டும். உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு பதிலாக, பிஸ்கட்டுக்கு குலைக்கும் தெருநாய்கள் கேட்டில் தான் கட்டி வைக்கப்படுவார்," எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்தப் பதிவிற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அந்த டுவீட்டை பிரபாகரன் நீக்கினார். இதைத் தொடர்ந்து, கட்சியின் ஒழுங்குக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஹரி பிரபாகரன் விடுவிக்கப்படுவதாக அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...