மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனீக்கள் கொட்டியதால் போலீசார் உள்பட 20 பேர் பாதிப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனீக்கள் கொட்டியதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்பட 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனீக்கள் கொட்டியதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்பட 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இன்று திங்கட்கிழமை என்பதால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் இருந்த தேன்கூடு திடீரென கலைந்து, அதில் இருந்த தேனீக்கள் அங்கிருந்த பொதுமக்களை தாக்கத் தொடங்கியது. இதனால், குறைதீர்ப்புக் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மட்டுமல்லாது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில், போலீசார் உட்பட 20-க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டியது. 

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல்துறையினரின் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டதோடு, பொதுமக்களை சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளேயே பத்திரமாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். 

கடந்த ஒரு வாரமாக தேன்கூடு பெரிய அளவில் இருந்த நிலையில், அதனை அப்புறப்படுத்தாமல் அலட்சியப்படுத்தப்பட்டதன் காரணமாக இன்று பொதுமக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பொதுமக்கள் இந்த தேனீக்கள் தாக்குதலால் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...