தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தவர்கள் இவர்கள் தானாம்..!

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் படி, அங்கு துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தவர்களின் பெயர்கள் மற்றும் காரணங்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் படி, அங்கு துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தவர்களின் பெயர்கள் மற்றும் காரணங்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்க எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்றே தெரியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்து இருந்தார். தற்போது இந்த துப்பாக்கி சூட்டை நடத்த ஆணையிட்டது யார், என்ன காரணமாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது இரண்டு பேர் என எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தனி வட்டாட்சியர் சேகர், மண்டல் துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டிற்கான காரணத்தையும் அதில் விளக்கியுள்ளனர்.



அவர்கள் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடியில் 10,000-க்கும் அதிகமான "சமூக விரோதிகள்" கலகத்தை ஏற்படுத்தும் வகையில் போராடினார்கள். கலைந்து செல்லும்படி கூறியும் செல்லவில்லை. வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் யாரும் செல்லவில்லை. "சமூக விரோதிகள்" கலைந்து செல்லவே இல்லை. கண்ணீர் புகை குண்டு, லத்தி சார்ஜ், ரப்பர் குண்டு என எல்லா முறைகளையும் பயன்படுத்தியும் மக்கள் கலையவில்லை.



கலவரம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அரிவாள், கத்தி, கம்புகளுடன் மக்கள் போலீசை தாக்கினார்கள். அரசு அலுவலகத்தை பெட்ரோல் குண்டுகளுடன் மக்கள் முற்றுகையிட முயற்சித்தார்கள். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள். திரேஸ்புரத்தில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும் மீண்டும் கலவரம் செய்தனர். 100 பெண்கள் உட்பட 500 பேர் வரை காவல் நிலையத்தில் நுழைய முயன்றனர். கலவரக்காரர்கள் போலீசாரை கொலை செய்ய முயற்சி செய்தார்கள். இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் பிரச்சனையாகும் என்று துப்பாக்கி சூடு நடத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் தூத்துக்குடி துணை வட்டாச்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...