தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோருக்கு நிவாரணத் தொகையை அதிகரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த பேரணியில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தன. அரசே தன் மக்களை கொலை செய்வது அரச பயங்கரவாதம் என்று தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி கிடைத்தது. தொடர்ந்து, உயிரிழந்தோர், படுகாயமடைந்தோர் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு 'வகை வகையாய்' நிவாரணத் தொகையை வழங்குவதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர்க்கான நிவாரணத் தொகையை அதிகரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கான நிவாரணத் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலத்த காயமடைந்தோருக்கு ரூ.3 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக நிவாரணத் தொகை அதிகரிக்கப்படும் என்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ. 1.5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் மிகுந்த துயரமும், மனவேதனையும் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.