துப்பாக்கிச் சூடு: முதலமைச்சர் காவல் துறை டி.ஜி.பி., மீது கொலை வழக்குப் பதிவு செய்யுங்கள் - மு.க.ஸ்டாலின்

சென்னை: துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதலமைச்சர், காவல் துறை டி.ஜி.பி., மற்றும் உளவுத்துறை ஐ.ஜி., ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதலமைச்சர், காவல் துறை டி.ஜி.பி., மற்றும் உளவுத்துறை ஐ.ஜி., ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமைதியாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அப்பாவிமக்கள் மீது, திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்துவிட்டு, துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்திப் பேசிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க., அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

துப்பாக்கிச்சூட்டில் 25 முதல் 30 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை வேண்டுமென்றே பல்வேறு காரணங்களுக்காகக் குறைத்துக் காட்டுகிறார்கள் என்றும் அடுத்தடுத்து பத்திரிக்கை செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மீறும் வகையிலும் ஸ்டெர்லைட் போராட்டத்தை முன் நின்று வழி நடத்தியவர்கள் குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். போலீசாரின் நடவடிக்கை இந்திய தண்டனைச் சட்டம் சொல்லும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவையானதற்கும் அதிகமான துப்பாக்கிகளும் திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், துப்பாக்கிச் சூட்டை தற்காப்பு நடவடிக்கையையும் தாண்டி முக்கிய போராட்டக்காரர்களைக் குறிவைத்துக் கொல்லும் ஆபரேஷன் ஆகவும் மாறிவிட்டது.

இப்படியொரு சதித்திட்டம் அடங்கிய துப்பாக்கிச்சூடு உளவுத்துறை ஐ.ஜி, சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தெரியாமலோ, பேரணியைக் கையாண்ட தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில் சரத்குமார், தென்மண்டல ஐ.ஜி. மகேஸ்குமார் அகர்வால் ஆகியோருக்கு தெரியாமலோ நடைபெற்றிருக்க எள்ளளவும் வாய்ப்பு இல்லை.

ஆகவே, துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் முழு உண்மையான எண்ணிக்கையை உடனடியாக வெளியிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முன்னணித் தலைவர்களைக் குறிபார்த்துச் சுட்டுக்கொன்றது பற்றி விசாரித்து, குறிப்பாக ஓர் இளம்பெண்ணை வாயில் சுட்டுக்கொன்ற இதயமில்லாத காவல்துறையினரை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்கள் மீதும், சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன், உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில் சரத்குமார், மதுரை மண்டல ஐ.ஜி மகேஸ்குமார் அகர்வால் ஆகியோர் மீதும், இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு உடந்தையாக இருந்து ஒப்புதல் அளித்துக் கூட்டுச்சதி செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் கொலை வழக்குப் பதிவுசெய்து, நியாயமாக விசாரணை நடத்திட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...