மேட்டுப்பாளையம்: வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி வனப் பகுதியின் மேல் தனியார் ஹெலிக்காப்டர் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதியில் ஹெலிக்காப்டர் மூலம் வானில் வட்டமிட்டு பறந்தபடி இயற்கை அழகை ரசிக்க அழைப்பு விடுத்து நேற்று முதல் அதற்கான நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருபது நிமிடங்கள் பறந்தபடி மேட்டுப்பாளையம் பகுதியினை மேலிருந்து பார்த்து ரசிக்க நபர் ஒருவருக்கு ரூபாய் நான்காயிரம் என்ற கட்டணத்தில் ஒரு தனியார் நிறுவனத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் நாளான நேற்று பலரும் ஆர்வமுடன் இதில் பயணித்த நிலையில், மேட்டுப்பாளையம் வனத்துறையினர் இப்பகுதி காடுகளின் மேலே ஹெலிக்காப்டர் பறந்து செல்லத் தடை விதித்து நோட்டிஸ் வழங்கினர். வனத்தின் இயற்கை அழகை காணும் வகையில் காடுகளை ஒட்டி பயணிகளோடு ஹெலிக்காப்டர் தாழ்வாக பறப்பதால் இதன் பெரும் சப்தத்தில் வன உயிரினங்கள் மிரண்டு ஓடுவதாகவும், இங்குள்ள யானைகளின் வழித்தட பாதை மற்றும் ஆற்றங்கரையோரத்தின் மேலே ஹெலிக்காப்டர் பறந்தால் யானைகள் திசை மாறி ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், மனித-விலங்குகள் மோதல்கள் அதிகம் நிகழும் மேட்டுப்பாளையம் பகுதியில் இது போன்ற நிகழ்வுகள் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும் என்றும், தடையை மீறி வனப் பரப்பிற்கு மேலோ அல்லது அதன் அருகாமையிலோ ஹெலிகாப்டரை இயக்கினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனத்துறையினரின் இந்த நடவடிக்கை வன உயிரின ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.