தொடர்ந்து மழையால் பாதிக்கப்படும் கூடைப்பந்து போட்டிகள்: உள்விளையாட்டு அரங்கம் அமைக்கக் கோரும் வீரர்கள்

கோவை: கோவையில் மழை போன்ற காரணங்களால் போட்டிகள் தடைப்படுவதால், திறந்தவெளி மைதானமாக இருக்கும் கூடைப்பந்து மைதானத்தை, உள்விளையாட்டு அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவையில் மழை போன்ற காரணங்களால் போட்டிகள் தடைப்படுவதால், திறந்தவெளி மைதானமாக இருக்கும் கூடைப்பந்து மைதானத்தை, உள்விளையாட்டு அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 53-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆண்களுக்கான போட்டிகள் மற்றும் பதினேழாவது சி.ஆர்.ஐ. பம்ப் கோப்பை பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் தலைசிறந்த 8 அணிகளான பஞ்சாப் போலீஸ், டெல்லி - இந்திய விமானப்படை,சென்னை - வருமான வரி அணி, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், டெல்லி இந்தியன் ரயில்வே அணி, பெங்களூரு ஏ.சி.எஸ், டெல்லி வருமான வரி அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து அணிகள் பங்கேற்கின்றன.



முதல் நாள் போட்டியில் ஆண்கள் பிரிவில் டெல்லி வருமான வரி அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. பெண்கள் பிரிவில் முதல் போட்டியில் கேரள மாநில மின்வாரிய அணியை எதிர்த்து தமிழ்நாடு ஜூனியர்ஸ் அணி விளையாடியது.



ஆட்டத்தின் பாதியில் மழை பெய்யத் துவங்கியதையடுத்து போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மின்சார தடையும் ஏற்பட்டதால் போட்டிகள் தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் ஒருமணி நேரம் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர், மைதானத்தில் தேங்கி இருந்த நீர் வெளியேற்றப்பட்டு, மீண்டும் போட்டி நடைபெற்றது.

மழை பெய்த காரணத்தால் பந்தை கையாள வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இறுதியில், ஆண்கள் பிரிவில் டெல்லி வருமான வரி அணி 87-78 என்ற புள்ளிகள் அடிப்படையில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு ஜூனியர்ஸ் அணியை 34-75 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி கேரள வாரிய மின்வாரிய அணி வெற்றி பெற்றது.

இதனிடையே, மாநகராட்சி உடனடியாக நிதி ஒதுக்கி, இதை உள்விளையாட்டு அரங்கமாக மாற்ற வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஏற்கனவே, உறுதியளித்திருந்த கைப்பந்து மைதானத்தில் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்படுவதற்கான பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.



விளையாட்டை ஊக்குவிக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்குமா..? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...