இந்துத்துவாவைப் பரப்ப ஊடகங்களுக்கு பணப் பட்டுவாடா: இந்திய ஊடகங்களின் முகத்திரையைக் கிழித்த 'ஆபரேசன் 136'

நாடு முழுவதும் இந்துத்துவா தொடர்பான ஆதரவு செய்திகளை ஒளிபரப்புவதற்காக தேசிய ஊடகங்கள் பல்வேறு இந்து அமைப்புகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட சம்பவம் கோப்ரா ஆப்ரேசனின் மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


நாடு முழுவதும் இந்துத்துவா தொடர்பான ஆதரவு செய்திகளை ஒளிபரப்புவதற்காக தேசிய ஊடகங்கள் பல்வேறு இந்து அமைப்புகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட சம்பவம் கோப்ரா ஆப்ரேசனின் மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் இந்துத்துவா மற்றும் அதன் கொள்கைகளை பரப்ப சில இந்து அமைப்புகள் திட்டமிட்டன. இதற்காக, ஊடகங்களைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேசிய அளவிலான சில ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் பணம் பெற்றுக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அதனை பல்வேறு புலனாய்வுகளுக்கு பிறகு கோப்ரா போஸ்ட் என்ற இலாப நோக்கமற்ற செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் ஊடகத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோப்ரா போஸ்ட் என்னும் ஊடகம், “ஆபரேஷன் 136” என்ற பெயரில் புலனாய்வில் ஈடுபட்டது.

கடந்த 2017-ம் சர்வதேச ஊடக சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 136-ஆவது இடம் பிடித்ததைத் தொடர்ந்து இந்த புலனாய்வுக்கு 'ஆப்ரேஷன் 136' என்று பெயரிடப்பட்டது. மக்களுக்குத் தவறான செய்திகளை வெளிக்கொண்டு வரும் இந்திய ஊடகங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதற்காக, புஷ் சர்மா என்ற நிரூபர் இந்து அமைப்பின் உறுப்பினர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்கள் மற்றும் நாளிதழ்களை அணுகினார். அதில், 2 செய்தி நிறுவனங்களை தவிர மற்ற மீடியாக்கள் பணத்திற்கு விலைபோனது அதிர்ச்சியடைந்தது. இதற்காக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ. 500 கோடி வரை விலை பேசப்பட்டிருப்பது தெரிய வந்தது.

குறிப்பாக, வட இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு ஊடகங்கள், பணம் வாங்கிக் கொண்டு இந்துத்துவத்தை ஆதரிக்கும் வகையிலும் செய்திகளை வெளியிட்டதாகக் கூறியுள்ளது. இதற்குச் சாட்சியாக குறிப்பிடப்பட்டுள்ள ஊடகங்களின் ஊழியர்களைச் சந்தித்து ஸ்டிங்க் ஆபரேஷன் (sting operation) நடத்தியது. இந்த ரகசிய காட்சிப்பதிவில், எவ்வாறு தவறான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்று ஊடகவியாளர்களே விளக்கியுள்ளனர். இத்தகைய நடத்தை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான செய்தியை வெளியிட்டு பரபரப்பையும் கோப்ரா போஸ்ட் கிளப்பியது.

வெளியிட்டுள்ள இந்தச் செய்தியில் பல்வேறு இந்திய ஊடகங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே, இந்துஸ்தான் டைம்ஸ், ஜு நியூஸ், நெட்வொர்க் 18, பே.டி.எம்., பாரத் சமாச்சர், சுவர்னா, பார்த்மன், தைனிக் ஜாக்ரன், ஸ்டார் இந்தியா, ஏபிபி நியூஸ், தைனிக் சாம்வாட், ரேடியோ ஒன், ரெட் எஃப்.எம்., லோக்மாட், ஏபிஎன் ஆந்த்ர ஜோதி, டிவி5, தினமலர், பிக் எஃப்.எம்., கே நியூஸ், இந்தியா வாய்ஸ், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், எம்.வி.டி.வி., இந்தியா டி.வி., இந்தி ஹபார், சேப் டி.வி., டி.என்.ஏ., அமர் உஜாலா, யூ.என்.ஐ., 9 எக்ஸ் டாஷன், சமச்சர் பிளஸ், எச்.எச்.என். லைவ் 24*7, பஞ்சாப் கேசரி, ஸ்வத்தந்திரா பாரத், ஸ்கூப்வூப், ரெட்டிஃப்.காம், இந்தியா வாட்ச், ஏஜே, சதனா பிரைம் நியூஸ் மற்றும் பல நாளிதழ்கள், வார இதழ்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கோடிக்கான பேரத்தை பார்தமன் பத்திரிக்கா மற்றும் தைனிக் சம்பாடு என்ற இரு செய்தி நிறுவனங்கள் மட்டுமே மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வாறு செய்தி பரப்பிய ஊடங்கங்களை பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...