கோவை: கோவை கொடிசியா மைதானம் அருகே நின்று கொண்டிருந்த காரை கத்திமுனையில் கடத்திச் சென்ற கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காளப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகன் ஜெயப்பிரகாஷ். இவர், கொடிசியா பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு உள்ளே அமர்ந்து இருந்தார். அப்போது, ஜெயப்பிரகாசை நோட்டமிட்டு வந்த மர்மநபர், கத்திமுனையில் அவரிடமிருந்து மாருதி சிப்ட் கார், 2 செல்போன்கள் மற்றும் ரூ. 1,500 ரொக்கத்தையும் அபகரித்துச் சென்றுள்ளான்.
கோவை அவிநாசி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது. அதே போல காலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் இந்த பிரதான சாலையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பட்டப்பகலில் கத்திமுனையில் நடைபெற்றுள்ள இந்த துணிகர சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். அதேபோல, அவினாசி சாலையில் சிக்னல்களில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.