தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்த செல்வசேகரின் உடலுக்கு பிரேத பரிசோதனை

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான செல்வசேகரின் உடல் நீதிபதிகளின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான செல்வசேகரின் உடல் நீதிபதிகளின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட நீதிபதிகள் 4 பேர் முன்னிலையில், 6 மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதனிடையே, மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்திருந்த பொதுமக்களை லேசான தடியடி நடத்தியே போலீசார் விரட்டியடித்தனர்.

பொதுவாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்தான் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் காரணமாக வைத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்குப் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த செல்வசேகர் என்பவரின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 3 நீதிபதிகள் முன்னிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த பிறகு, பதப்படுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...