இரு காதலிகளை ஒரே நேரத்தில் மணக்கும் ரொனால்டினோ

கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் ஒருவரான பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ ஒரே நேரத்தில் தனது 2 காதலிகளையும் திருமணம் செய்ய உள்ளார்.

கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் ஒருவரான பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ ஒரே நேரத்தில் தனது 2 காதலிகளையும் திருமணம் செய்ய உள்ளார். 

பிரேசில் நாட்டுக் கால்பந்து அணிக்காக விளையாடியவர் உலகப் புகழ்பெற்ற ரொனால்டினோ (38). பிரேசில் அணிக்காக 97 சர்வதேசப் போட்டிகளில் 33 கோல்களை அடித்துள்ளார். இரண்டு முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2002-ல் பிரேசில் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். ஃபிபாவின் மிகச் சிறந்த வீரர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். புகழ்பெற்ற ஜெர்மியோ, பி.எஸ்.ஜி., பார்சிலோனா கிளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கிளப் அணிகளுக்காக 441 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 167 கோல்களையும் அடித்துள்ளார்.

இந்த நிலையில், பிரிசிலா கோயல்ஹோ மற்றும் பீட்ரிஸ் சௌசா ஆகிய இரண்டு பேரை அவர் காதலித்து வந்தார். சௌசாவுடன் 2016-ல் இருந்து பழகத் தொடங்கினார். ஆனால், அதற்கு முன்பே கோயல்ஹோவுடன் பழகி வந்தார். இருவருடனான நட்பையும் ஒரே நேரத்தில் தொடர்ந்து வந்துள்ளார். கடந்தாண்டு ஜனவரியில், தன்னுடைய காதலை இருவரிடம் கூறியுள்ளார். இருவருடனும் அவர் மோதிரம் மாற்றிக் கொண்டார். ரியோடிஜெனிரோவில் உள்ள தனது வீட்டில் இரண்டு காதலிகளுடன் கடந்தாண்டு டிசம்பரில் குடியேறினார். 

இதனிடையே, வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரொனால்டினோ கூறியிருந்தார். இவர்களில் யாரை அவர் திருமணம் செய்வார் என்று பட்டிமன்றம் நடந்து வந்தது. ஆனால், இருவரையுமே அவர் திருமணம் செய்யப் போவதாக பிரேசில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இருவருக்கும் ஒரே மாதிரியான பரிசுப் பொருட்களை ரொனால்டினோ வாங்கி குவித்து வருகிறார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...