கோவையில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற 850 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவை ராஜவீதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 850 கிலோ பான்மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை ராஜவீதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 850 கிலோ பான்மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 



ராஜவீதியில் வழக்கமான வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு மினிடோர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இது தொடர்பாக போலீசார், உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், விஜயலலிதா தலைமையிலான அதிகாரிகள் வந்து சோதனை மேற்கொண்டர். சோதனையில், இரு வாகனங்களிலும் 28 மூட்டைகளில் 850 கிலோ தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த அசோக் மற்றும் பாப்பு என்ற வடமாநில இளைஞர்களிடம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்தத் தடை செய்யப்பட்ட பொருட்கள் எங்கு உற்பத்தி செய்யப்பட்டது. விற்பனைக்காக எங்கு கொண்டு செல்லப்படுகிறது உள்ளிட்டவை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணைக்குப் பிறகு, இந்த பான்மசாலா உற்பத்தியில் இருப்பவர்கள், விற்பனைக்கு வாங்க இருப்பவர்கள் என அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 



இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் ஸ்டீபன்ராஜ் கூறுகையில், "கடந்த 2016-ம் ஆண்டு அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் கோவை கண்ணம்பாளையத்தில் தயாரிக்கப்பட்டு வந்தது. இதனைக் கண்டித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குள், தற்போது மீண்டும் மூட்டை மூட்டையாக பான்மசாலா பொருட்கள் விற்பனைக்குக் கொண்டு செல்வது அதிர்ச்சி அளிக்கிறது," என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...