கோவையில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை: கோவையில் வாகனத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோவை: கோவையில் வாகனத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவின் உத்தரவின்பேரில் ஆர்.எஸ்.புரம் காவல் ஆய்வாளர் ஜோதியின் தலைமையில் கஞ்சா கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினர், கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி சீரநாய்க்கன்பாளையம் சுகர்கேன் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 6 மணி அளவில் அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை (TN 63 X 7777) சோதனை செய்தனர். அப்போது, சுமார் 216 கிலோ கஞ்சா அந்த வாகனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், அந்த வாகனத்தில் இருந்த இருளாண்டி, தர்மர், பாண்டீஸ்வரர் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நால்வர் மீதும் என்.டி.பி.எஸ். சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.



இதனிடையே, நான்கு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து ராம்பாபு என்பவரிடம் இருந்து கஞ்சாவினை வாங்கி வந்து கோவையில் விற்க முயன்றது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கஞ்சா கடத்திய வழக்கில் நான்கு பேர் மீதும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்தது. இருளாண்டி மற்றும் தருமர் மீது கடந்த 19-ம் தேதியும், பாண்டீஸ்வரர் மற்றும் சதீஷ்குமார் மீது நேற்று குண்டர் சட்டம் போடப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...