கோவை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு முடிவின் படி இன்றும், நாளையும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாளை நீதிமன்றங்களை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
வழக்கறிஞர்களின் இந்த புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இந்த புறக்கணிப்பு போராட்டத்தால் பல ஜாமீன் மனுக்கள் ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.