நிபா வதந்தியில் கோவை வ.உ.சி பூங்கா

கோவை: கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரசால் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்நோய் பற்றிய அறிய தகவல்களும், வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

கோவை : கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரசால் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்நோய் பற்றிய அறிய தகவல்களும், வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

கோவை மாவட்டம் கேரளா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளதால் நிபா வைரஸ் பற்றிய பதற்றம் இங்கு அதிகமாகவே உள்ளது.



நிபா வைரஸ் வௌவால்களால் பரவுகிறது, அதனால் வௌவால்கள் அதிகம் வசிக்கும் வ.உ.சி பூங்காவிற்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் அங்கு விற்கப்படும் உணவுகளை பொதுமக்கள் வாங்கி உன்னுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகள் உலாவி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வ.உ.சி பூங்காவில் மக்கள் கூட்டம் குறைந்து விட்டதாகவும், நடைபாதை கடைகளில் உணவு விற்பனை சரிந்துவிட்டதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.



இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம், நிபா வதந்திகள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களால் பரப்பப்படுபவை என்றும், இதனால் வௌவால்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தொடர்ந்து, பூச்சிகளும், கொசுகளும் பெருகிவிடும் என்றும் அவற்றை அழிக்க பிரத்தியேக பூச்சிக் கொள்ளிகள் சந்தைப்படுத்தப்படும் என்கிற செய்தியும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.



"வ.உ.சி பூங்கா பற்றிய வதந்திகள் அனைத்தும் அரசால் பரப்பப்படுபவையே. ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல் வ.உ.சி பூங்கா பகுதிகளில் இளைஞர்கள் போராட்டங்களை தொடங்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கவே இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகிறது." என்கிறார் பீளமேட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரவிக்குமார்.



இந்நிலையில், மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் கூறுகையில், "நிபா வைரஸ், வௌவால் மற்றும் பன்றிகளின் உணவு எச்சத்தின் மூலம் தான் பரவுகிறது. எனவே, பறவைகள் கொரித்த பழம் என்று எண்ணி சேதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி உண்ண வேண்டாம். வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். 



நோய் தொற்று உள்ள பன்றிகளை அருகில் சேர்க்காமல், சிகிச்சைக்குக் கொண்டு செல்ல வேண்டும். தேவையில்லாத வதந்திகளை எண்ணி பயப்படத் தேவையில்லை. சுத்தமாக இருப்பதே நோய் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் முதல் நடவடிக்கை. மேலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வௌவால் அதிகமாக காணப்படும் வ.உ.சி பூங்கா முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசனிகள் தெளிக்கும் பணிகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது." என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...