ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுமி: மகளை மீட்கப் போராடிய தாய் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர்: திருப்பூர் அருகே ஏரியில் சிக்கி சிறுமி உயிரிழந்த நிலையில், அவரை மீட்கப் போராடிய தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் அருகே ஏரியில் சிக்கி சிறுமி உயிரிழந்த நிலையில், அவரை மீட்கப் போராடிய தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெருமாநல்லூர் பட்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி ராமசாமி, ரோஷி தம்பதியினருக்கு பவித்ரதர்ஷினி (9), மற்றும் வைஷாலி (8) ஆகிய இரு மகள்கள் இருந்தனர். இந்நிலையில், ராமசாமி வேலைக்கு சென்றிருந்தார். இதனால், ரோஷி தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள ஏரியில் கால் கழுவச் சென்றுள்ளார். அந்த சமயம், பவித்ரதர்ஷினி எதிர்பாராதவிதமாக, சேற்றில் சிக்கிக் கொண்டார்.

மகள் சேற்றில் சிக்கிக் கொண்டதை பார்த்த தாய் ரோஷி, சிறுமியை மீட்க முயன்றார். அப்போது, அவரும் சேற்றில் மாட்டிக் கொண்டார். இதனால், பயந்து போய் மற்றொரு மகளான வைஷாலி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்த ரோஷியை மீட்டனர். ஆனால், சேற்றின் அழுத்தத்தால் சிறுமி பவித்ரதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், சேற்றில் சிக்கி உயிரிழந்த பவித்ரதர்ஷினியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரோஷிக்கு அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...