தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்

தூத்துக்குடி: வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் இணைய சேவையை முடக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி: வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் இணைய சேவையை முடக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது. இதனையடுத்து, அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டம் குறித்து வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கி வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரையிலும் மொபைல் போனிலும், இணைய சேவையை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...