கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்றார் குமாரசாமி

கர்நாடகா: கர்நாடக முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமியும், துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் ஜி.பரமேஸ்வராவும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கர்நாடகா: கர்நாடக முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமியும், துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் ஜி.பரமேஸ்வராவும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கடந்த 17-ம் தேதி பா.ஜ.க.,வின் எடியூரப்பா முதலமைச்சராகப் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, 19-ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன் அவர் ராஜினாமா செய்தார். இதனால், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி சார்பில் குமாரசாமியை முதலமைச்சராக பதவி ஏற்கும்படி, ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகா முதலமைச்சராக குமாரசாமி, இன்று மாலை பதவியேற்றார். துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா பதவியேற்று கொண்டார்.



பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ்வாதி தலைவர் மாயாவதி, உம்மன் சாண்டி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சரத்பவார், தேவகவுடா, மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...