தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலிசார் 2-வது நாளாக நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலிசார் 2-வது நாளாக நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான 11 பேரின் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். கல்வீசி தாக்கியவர்கள் மீது போலீஸார் 2 வது நாளாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் தூத்துக்குடி பல்வேறு பகுதிகளில் கவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் அண்ணாநகர் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் காளியப்பன்(22) என்பவர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி. இதனையடுத்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.