ஸ்டெர்லைட் விவகாரம்: கோவையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மற்றும் மாநில அரசை கோவையில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மற்றும் மாநில அரசை கோவையில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அரசின் இந்த போக்கை தமிழகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை டாட்டாபாத் பகுதியில், பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் மக்கள் அதிகாரம், த.பெ.தி.க., ம.தி.மு.க., வி.சி.க., புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "துப்பாக்கிச் சூடு என்பது திட்டமிட்ட படுகொலை. மான் சுட அனுமதி இல்லாத நாட்டில், மனிதனைச் சுட எப்படி அனுமதி கிடைத்தது? துப்பாக்கிச் சூடு என்பது திட்டமிட்ட படுகொலை. குழந்தைகளுடன் ஜனநாயக முறைப்படி போராடியவர்களை அரசே சுட்டுக் கொலை செய்துள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டும்." என்றனர்.



Video: Laxman

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...