திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 97.18 சதவீதம் பேரும், நீலகிரி மாவட்டத்தில் 95.20 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 336 பள்ளிகளைச் சேர்ந்த 13,987 மாணவர்கள் மற்றும் 14,227 மாணவிகள் என மொத்தம் 28,214 பேர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதினர். இதில் 13,486 மாணவர்கள் மற்றும் 13,932 மாணவிகள் என 27,418 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 97.06 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 7-ஆம் இடத்தைப் பிடித்திருந்தது. இந்தாண்டு 97.18 சதவீதம் பெற்று தமிழகத்தில் அதே 7-வது இடத்தைத் தக்கவைத்துள்ளது.
நீலகிரி
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 95.20% சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 8,225 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,830 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மொத்தம் 2,745 பேர் தேர்வு எழுதினர். அதில், 2,487 பேர் தேர்ச்சி பெற்று, அரசுப் பள்ளிகளில் 90.60 சதவீதமாக தேர்ச்சி விகிதம் உள்ளது.

இந்த ஆண்டு 95.20 சதவீதம் தேர்ச்சி விகிதமாக உள்ள நிலையில், இது கடந்த ஆண்டை விட 0.11 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.