கோவையில் லஞ்சம் வாங்கிய வேளாண் இணை இயக்குனர் கைது

கோவையில் லஞ்சம் வாங்கிய வேளாண் இணை இயக்குனர் கைது

கோவை: வேளாண் இணை இயக்குனர் சுகுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் பொள்ளாச்சியில் உள்ள தனது 10 ஏக்கர் விவசாய நிலத்தை மனையடி நிலமாக மாற்ற என்.ஓ.சி (தடையில்லா சான்றிதழ்) பெற வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தை அணுகினார். 

இந்த நிலையில், விவசாய நிலத்தை மனையடி நிலமாக மாற்ற வேளாண் இணை இயக்குனர் ரூ.1.5 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அசோக் குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

பின்னர், நேற்று மாலை தடாகம் சாலையில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், வேளாண் இணை இயக்குனர் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதேபோல், அவரது உதவியாளர் முருகனும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Video : Laxman

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...