கோவை : தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்தில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வினை தமிழகத்தில் இருந்து மட்டும் 4,74,340 மாணவர்கள், 4,76,057 மாணவிகள் என 9,50,397 பேர் எழுதினர். இதுதவிர, 50,743 பேர் தனித்தேர்வர்களாக தேர்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இன்று வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில்
94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
5,584 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகள் 1,687 ஆகும். 2,06,796 பேர் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

முதலிடம்
சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 98.38 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 98.26 சதவீத தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
மாணவர்கள் அளித்திருந்த செல் போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் அனுப்பப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn. nic.in ஆகிய இணையதள முகவரிகள் மூலமாக தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.